அனைத்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள அறிவித்துள்ள ஸ்ரீலங்கா அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவை அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகளில் ஆளுந்தரப்பும், எதிர்த்தரப்பும் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளன.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெற்ற போட்டியை தொடர்ந்து அனைத்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக மஹேல ஜயவர்தனவும், குமார் சங்கக்காரவும் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இரண்டு மூத்த உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் குமார் சங்கக்காரவை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நாளைய தினம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பவுள்ள நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏட்டிக்குப் போட்டியாக வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
அதுபோல குமார் சங்கக்காரவின் சாதனைகளை பாராட்டும் சில நிகழ்வுகளும் கண்டியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என குமார் சங்கக்கார அண்மையில் அழுத்தமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments