கொழும்பு – பம்பலப்பட்டியில் அமைந்துள்ள யுனிட்டி பிளாஸா வர்த்தகக் கட்டடத்தின் 7ஆவது மாடியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
7ஆவது மாடியிலுள்ள கணினி விற்பனை நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயணைப்பு பிரிவின் 4 வாகனங்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்டன.
இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.









0 Comments