Subscribe Us

header ads

கெழும்பில் மஹிந்தவின் தேர்தல் அலுவலகம் தயாராகிறது


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக மீண்டும் அரசியலுக்குள் நுழையும் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதன் முதற்கட்டமாக கொழும்பு இராஜகிரிய கொஸ்வத்தை வீதியில் அமைந்துள்ள பீக்கொக் இல்லத்தை அவர் தேர்தல் அலுவலகமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஜோதிடர்கள் சிலர் அந்த இல்லத்திற்கு விஜயம் செய்திருப்பதாகவும், தேர்தல் அலுவலகத்தை அமைப்பதற்கான வாஸ்த்து நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இந்த இல்லத்தில் இருந்து தனது பணிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
 
இராஜகிரிய கொஸ்வத்தை வீதியில் அமைந்துள்ள பீக்கொக் இல்லம் பிரபர வர்த்தகர் ஒருவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கோரினால் அதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் மஹிந்ம அமரவீர இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments