வென்னப்புவ பிரதேசத்தில் பொலிஸாருக்குப் பயந்து மாஓய ஆற்றில் குதித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சூதாட்டம் இடம்பெற்ற பகுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைக்கச் சென்றபோத இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த ஒருவர் தப்பிச் சென்று அருகில் உள்ள ஆற்றில் குதித்துள்ளார்.
பின்னர் காணாமல் போன அவரது சடலம் பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு பலியானவர் வய்கால் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)
0 Comments