முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக தேர்தலில் ஈடுபடுமாறு கோரி, ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதில் மக்கள் கையொப்பம் இடும் போது, இனந்தெரியாதவர்களால் கல் எரியப்பட்டதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை ஜக்கிய தேசிய கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நடவடிக்கை இன்று, கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கே.கே.பியதாஸ தலைமையில் ஹட்டனில் நடைபெற்றது.
இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஐ.தே.க ஆதரவாளர்களே இக் கல்வீச்சில் ஈடுப்பட்டிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.


0 Comments