ஸ்வீடனின் தென் மேற்குப் பகுதியில் உள்ள கோதன்பர்க் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கலாஷ்நிகோவ் ரக தாக்குதல் துப்பாக்கிகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கும்பல்களுக்கிடையிலான மோதலின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் உல்லா ப்ரெம் தெரிவித்துள்ளார்.
அந்த உணவகத்திற்குள் நுழைந்த இரண்டு நபர்கள், துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததாக அங்கிருந்த ஒருவர் ஸ்வீடன் நாட்டு தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
உணவகத்தில் இருந்தவர்கள் ஒரு கால்பந்தாட்டப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
இது தொடர்பான விசாரணையை ஸ்வீடன் அரசு துவங்கியுள்ளது.


0 Comments