ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில், பள்ளி மாணவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
பீமுனிபட்டிணம் மண்டல் நகராட்சிப் பகுதியில் மரடபலம் எனும் இடத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஆசிரியரான அனில்குமார் மீதுதான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக, நான்காம் வகுப்பு படிக்கும் சூர்யா தேஜா மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் திலிப்குமார் ஆகிய மாணவர்களது ஆடைகளைக் களைந்து, வெயிலில் நிற்க வைத்து ஆசிரியர் தண்டனை வழங்கியுள்ளார். இதனை அறிந்த மாணவர்களது பெற்றோர், மண்டல் கல்வித்துறை அதிகாரி சாய்பாபுவிடம் புகார் அளித்ததை அடுத்து, ஆசிரியர் அனில்குமாரை அழைத்து அவர் கண்டித்துள்ளார்.


0 Comments