Subscribe Us

header ads

சீகிரிய சுவரில் எழுதிய யுவதிக்கு சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டும் – ரஞ்சன்


சமீபத்தில் சீகிரிய பளிங்கு சுவரில் சேதத்தை ஏற்படுத்திய குற்றித்திற்காக இரண்டு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள பெண்ணிற்கு சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு பொறுப்பான நிறுவனங்களுடன் சம்பவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளியினை நீக்க சகலரும் மன்னிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சின்னதம்பி உதயஸ்ரீ என்ற யுவதி தன் காதலனின் பெயரை சீகிரிய பளிங்கு சுவரில் எழுதியிருந்தார்.
குறித்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments