Subscribe Us

header ads

BBS ஐ இயக்கியது மஹிந்த அரசாங்கமே-ஐ.நா.குழுக் கூட்டத்தில் நிஸாம் காரியப்பர்


முஸ்லிம்களை அடக்குவதற்காகவும் அவர்களது பொருளாதார மையங்களை இலக்கு வைத்து அவற்றை அழிப்பதற்காகவும் பொதுபல சேனாவை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்தியதாக  கல்முனை மாநகர முதல்வர் எம். நிஸாம் காரியப்பர் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன் முறைகளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே இருந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுக் கூட்டம் அதன் விசேட துதுவர் ஹைனர் பீல்ட்பெல்ட் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (12) ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதுடன் முஸ்லிம்கள் மீதான பேரினவாத வன்முறைகள் எனும் கருப்பொருளிலும் இதில் உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது-DC-

Post a Comment

0 Comments