இது என்னுடைய மனைவி கூகிள் ராணி. நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பொருத்தமாக நிறைய பதில்களையும் பொருந்தாத நிறைய பதில்களையும் தருவார்.!
இது என்னுடைய மகன் பேஸ் புக் குமார். அவன் கண்டிப்பாக தனிப்பட்ட விஷயங்களையும், சொந்த விஷயங்களையும் காலனி முழுக்க பரப்புவதில் வல்லவன்.!
இது என்னுடைய மகள் ட்விட்டர் குமாரி. இந்த மொத்த காலனியே அவள் பின்னால் நடக்கிறது.!
இது என்னுடைய அம்மா வாட்ஸ் அப்.அம்மாள். எப்பொழுதும் முணுமுணுத்துக் கொண்டே எல்லா விஷயங்களையும் விமர்சனம் செய்து கொண்டிருப்பார் !
கடைசியாக நான் ஆர்குட் ரவி. முன்பு என்னை எல்லோரும் விரும்பினார்கள். இப்பொழுது நான் வேண்டாதவன் ஆகிவிட்டேன்!-NT-


0 Comments