Subscribe Us

header ads

மஹிந்தவை கொண்டுவர ஆனந்த தேரரின் மாற்று முயற்சி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நாடு முழுவதிலுமுள்ள  பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ.ல.சு.க.யின் தலைவர்கள் ஆகியோரை ஒன்றுகூட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடச் செய்வதற்கான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முருத்தெட்டுவெ ஆனந்த தேரர் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். எதிர்வரும் 17 ஆம், 18 ஆம், 19 ஆம் திகதிகளில் இந்த ஒன்று கூடல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.
17 ஆம் திகதி நடைபெறும் ஒன்றுகூடலில் களுத்தறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஞாயிறு இதழொன்று அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments