இருதய நோய், மூட்டுவாதம் (ஆதரைடீஸ்), நீரிழிவு (சீனி வியாதி) ஆகிய நோய்கள் ஒருவருக்கு ஏற்படுமா என்பதை 15 வருடங்களுக்கு முன்னர் கண்டறிந்து எதிர்வுகூறும் இலத்திரணியல் கருவியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை பல்கலைக் கழகத்தின் இலத்திரணியல் மின் தகவல் பிரிவின் கலாநிதி அஞ்சுல டி சில்வா கூறினார்.
இக் கருவியின் பரீட்சார்த்த பரிசோதனைகள் வெற்றியளித்துள்ளது. மேலும் பல நோய்களையும் இவ்வாறு கண்டறியக் கூடிய விதத்தில் இக் கருவியை மேம்படுத்தும் பணிகள் தொடருவதாகக் கூறிய கலாநிதி அஞ்சுல, இவ்வாறான கருவியொன்று இலங்கையில் முதன்முறையாக நிருமாணிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் கூறினார்.
நாடி அழுத்தத்தை அளக்கும் கருவி அல்லது உடல் வெப்பத்தை அளப்பதற்கு விரலில் செருகும் கருவி போன்ற வன்பொருள் (Hardware) மூலம் கணினிக்குள் தகவல்கள் செலுத்தப்படும். அக் கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள் (Sofware) பெறப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து நோய் குறித்த எதிர்வுகூறல்களை வழங்கும். மேற்படி Hardware-களும் Software-உம் இக் குழுவினால் நிருமாணிக்கப்பட்டதாகும்.
பேராசிரியர் வைத்தியர் சரோஜ் டி சில்வாவின் எண்ணக் கருவொன்றுக்கு ஏற்ப, கலாநிதி அஞ்சுலவின் மேற்பார்வையின் கீழ், மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் இலத்திரணியல் மின் தகவல் பிரிவின் விடுகை வருட மாணவர்களான இசுரு ராஜகருனா, சரித் விதானகே, சுநந்த கமகே, கீர்த்தி பிரியங்கர ஆகியோர் இக் கருவியை உருவாக்கியுள்ளனர்.
மூலம்: லங்காதீப (சிங்கள ஊடகம்)
நன்றி -TPT-



0 Comments