அஷ்ரப் ஏ சமத்
இந்நாட்டில் கண் தெரியாதவர்கள் 2 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்காக செயற்கையிலான ஒரு புதிய கண்ணாடியும் கைத்தொலைபேசி போன்ற கருவியும் தங்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் இலங்கையிலும் உலகிலும் அறிமுகப்படுத்தப்போவதாக ஏ.எஸ்.ஏ சர்வதேச தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி யு.எல்.எம் அனஸ் தெரிவித்தார்.
இந்த புதிய கருவி பற்றி இன்று கொழும்பு தெமட்டக்கொட சோனக இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்படி தகவல்களைத் யு.எல்.எம். அனஸ் மற்றும் ஏ.எம்.ஏ நில்காரும் தெரிவித்தனர். இந் ஊடகவியல் மாநாட்டினை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஏற்பாடு செய்திருந்தார்.
இங்கு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் எங்களது கண்டுபிடிப்பினை அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதறகான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கி இந்த நாட்டில் விழிப்புணர்வற்றோர்களுக்கு இதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே ரத்மலானையில் உள்ள அரச விழிப்புணர்வற்றோர் 4 பேருக்கு இந்தக் கண்ணாடியை அணிவித்தும் அவர்களுக்கு பார்வை ஏற்படுவதாக தெரிவித்தனர். இதே போன்று உலகிலும் விழிப்புணவற்;றோர்கள் 37 மில்லியன் பேர் உள்ளனர். இந்த உற்பத்தியை பலஉறுப்பிணர்கள் சேர்ந்து முயற்சித்து கண்டுபிடித்தாகவும் தெரிவித்தனர். இதனை உள்ளுரில் உற்பத்தி செய்ததாகவும் சில மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலும் பெறப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஒரு கண்னாடி 17 ஆயிரம் ருபா பெருமதி வாய்ந்ததாகும்.
இந்தக் கண்டுபிடிப்பினை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்துவதன் முதற்கட்டமாகவே இவை பற்றிய ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதாகவும் ஆசர் கம்பணியினர் தெரவித்தனர். இக் கம்பணியை இந்த வருடமே தாங்கள் ஆரம்பித்தாகவும் தெரவித்தனர்.





0 Comments