Subscribe Us

header ads

இன்று நடந்து முடிந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் இவை. (PHOTOS)

-RAZANA MANAF-


1. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 50 வீரர்களை ஆட்டமிழக்க செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் சங்ககார.. முதலிடத்தில் இருப்பவர் அடம் கில்கிறிஸ்ட்.

2.மொமினுள் ஹக்கின் பிடியை எடுத்ததன் மூலம் உலக கிண்ண போட்டிகளில் அதிக பிடிகளை எடுத்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார் மஹேல..முதல் இரு இடங்களில் இருப்பவர்கள் பொண்டிங், மற்றும் சனத்.

3. உலக கிண்ண போட்டிகளில் இலங்கையணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர்களில் முதலிடத்தை பிடித்தார் தில்ஷான் இன்று பெற்ற 161* ஓட்டங்கள் வழியாக.. இதற்கு முன்பு இலங்கையணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களை பெற்றிருந்த வீரர் அரவிந்த டி சில்வா.

4.டில்ஷான் மற்றும் சங்கா இருவரும் இணைந்து 210 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட்டுக்கு இணைப்பாட்டமாக பெற்றிருந்தார்கள்.. ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் இலங்கையணி இரண்டாவது விக்கெட்டுக்கு பெற்ற இணைப்பாட்டங்களில் இது முதல் இடத்தில் பதிவு செய்யப்படுகின்றது.. முன்பு தில்ஷான் சங்கா இருவரும் இணைந்து 200 ஓட்டங்களை பெற்றிருந்தார்கள் இந்திய அணிக்கெதிராக.

5. உலக கிண்ண போட்டிகளில் அதிக சதம் அடித்த இலங்கை வீரர்களின் வரிசையில் சனத் ஜெயசூரியவுடன் இணைந்து தனது பெயரை பதிவுசெய்துகொண்டார் டில்ஷான் இருவரும் தலா 3 சதங்களை பெற்றிருக்கிறார்கள்.

6.தில்சான் மற்றும் திரிமான்னே இணைந்து 112 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தார்கள் உலக கிண்ண வரலாற்றில் இலங்கை பெரும் 5 சத இணைப்பாட்டம் அது.. எந்தவொரு அணியும் 5 சத இணைப்பாட்டத்தை இதுவரை பெறவில்லை.

7. சங்ககார இன்று தனது 400வது போட்டியில் விளையாடியிருந்தார் 400 போட்டிகளில் விளையாடும் நான்காவது வீரர் அவர்.. மூன்றாவது இலங்கை வீரர்.. முதல் மூன்று இடங்களிலும் சச்சின், சனத், மஹேல ஆகியோர் இருக்கிறார்கள்.

8. இன்றைய போட்டியில் இலங்கையணி வெற்றி பெற்றிருந்தது.. 400 போட்டிகளில் விளையாடும் வீரரின் அணி பெற்றிருக்கும் முதலாவது வெற்றி இது.. சச்சின், சனத், மஹேல ஆகியோர் விளையாடியிருந்த 400வது போட்டிகளில் அவர்களின் அணி தோல்வியடைந்திருந்தது.







Post a Comment

0 Comments