Subscribe Us

header ads

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு முன்னால் அமைச்சரின் அவசர வேண்டுகோள்.

(சம்மாந்துறை அன்சார்)

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
முஸ்லிம் காங்ரஸ் தலைவருக்கு எதிராகவும், முஸ்லிம் காங்ரஸ் கட்சிக்கு எதிராகவும் நாளை ஹர்த்தால் செய்வதற்கும், சமூகத்தில் மக்களிடையே குழப்பங்களை விளைவிப்பதற்கும் ஒரு சில பச்சோந்திகள் முனைப்புக் காட்டுகின்றனர் இவர்களது கனவுகள் ஒரு போதும் பலிக்காது இவர்கள் விடயத்தில் அம்பாறை மாவட்ட மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என முன்னால் கிழக்கு மாகாண அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்ரஸின் மூத்த போராளியுமான எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
கௌரவ அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எந்தவித பெயரோ, விலாசமோ இடப்படாத முகவரியற்ற துண்டுப்பிரசுரத்துக்கு இசைந்து நாம் ஹர்த்தால் அனுஷ்டிப்போமாக இருந்தால் நாம் அனைவரும் நஷ்டவாளிகள் மாத்திரமல்ல மறைந்த மாபெரும் தலைவர் அவர்களுக்கும் அவராலும்,மக்களாலும் உருவாக்கப்பட்ட கட்சிக்கும் நாம் செய்யும் மாபெரும் துரோகமும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனது அல்லது அமைப்பின் பெயர் விலாசத்தை போட தைரியமில்லாத,நாதியற்ற இவர்களின் நோக்கம் என்ன என்பதைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டுயுள்ளது.
தேசிய ரீதியாகவும்,ஏன் சர்வதேச ரீதியாகவும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்ற எமது பேரியக்கமான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் ஓரம் கட்டி,அவ்விடத்தை தாம் அடைய வேண்டுமெனக் கனவு காணும்  ஒரு பச்சோந்திக் கூட்டத்தின் முயற்சியே இதுவாகும்.
எமது மிகப்பெரும்பான்மையான வாக்குகளால் எமது இயக்கம் பெற்றுக்கொண்ட பேரம் பேசும் சக்தியைக்கொண்டு,எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும்,தீர்வு காணக்கிடைத்துள்ள வாய்ப்பை இல்லாமல் செய்கின்ற முயற்சியே நாளைய ஹர்த்தாலின் நோக்கம் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.
கடந்த காலங்களில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களும், பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை தவிர அனைத்து முஸ்லிம் கட்சிகளின் தலைமைத்துவங்களும்,சுயநலத்திற்காக முழுச் சமுதாயத்தையும் காட்டிக்கொடுத்தவர்கள் என கற்றுக்கொண்டுள்ளோம்.
இதை மறுதலித்து யாராவது நேர்மையான வேறு தலைமையும் இருக்கிறது என வாதிட முன்வந்தால்,அவர்களுக்கு நான் கூறவிரும்புவது என்னவென்றால்
அவ்வாறு நீங்கள் யாராவது விரும்பும் தலைமையோ அல்லது கட்சியோ அம்பாறை மாவட்டத்திற்குள் நுழைய இடம்கொடுத்தால்,இதுவரை நாம் பெற்றுவந்த 3 அல்லது 2 பாராளுமன்ற உறுப்புரிமைகளையும் கூட நாம் இழக்கின்ற நிலைமையே உருவாகும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அதுமாத்திரமின்றி மக்கள் அனைவரும் சிரிலங்கா முஸ்லிம் காங்ரசின் பின்னாலேயே இருக்கிறார்கள் என நம்பி, எமது பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கண்டு கொண்டிருக்கும்,தற்போதய அரசாங்கத்தையும் யோசிக்கச் செய்யவே இவ் ஹர்த்தால் வழி சமைக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 
சமூக குழப்பங்களுக் வழிசமைத்துக் கொடுக்கும் இத்தகைய பச்சோந்திகளின் நடவடிக்கைகளால் குறிப்பாக,சம்மாந்துறை மக்கள் கடந்த 10 வருடங்களாக இழந்து வந்துள்ள பாராளுமன்ற உறுப்புரிமையை பெற முடியாத நிலமையே உறுதி செய்யும் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை.
எனவேதான்,என்னருமை சகோதரர்களே! இந்த சமுக துரோகிகளின் நோக்கத்திற்கு, அடுமைப்பட்டுவிடாமல், உணரச்சிவசப்பட்டு விடாமல் ஹர்த்தாலை புறக்கணித்து வழமைபோல் எமது சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
எமது பொது எதிரிகளை,தோற்கடிப்போம்.
அல்லாஹூ அக்பர்.அல்லாஹு அக்பர்.அல்லாஹூ அக்பர்.

Post a Comment

0 Comments