25 வருட காலமாக புத்தளம் மாவட்டம் இழந்துவந்துள்ள சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துக்கின்ற PPAF இன் முயற்சியின் அடுத்த கட்ட செயற்பாடான ஒவ்வொரு வாக்கெடுப்பு பிரிவு பிரதேச மக்களை இந்த பணியில் உறுதி படுத்தும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முதல் நிகழ்வாக புத்தளம் வாக்கெடுப்பு பிரிவு 31 ற்கான செயற்குழு (Working Committe) அந்நிகழ்வின் போது நிறுவப்பட்டது. இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24.02.2015) HEC நிறுவனத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த
அரசியல் விழிபுணர்வினூடாக மக்கள் சக்தியை உருவாக்குதல் அதிலிருந்து புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகலை நிறிவேற்றுகின்ற பொறுப்பு கூறக்கூடிய தலைமைத்துவ சபையை ஒவ்வொரு பிரதேச செயற்குழு விலிருந்து உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் விரிவாக தெளிவு படுத்தப்பட்டன.
அத்துடன் எதிவரும் பாராளமன்ற தேர்தலில் புத்தளம் தொக்குதிக்கான பிரதிநிதியை பெற்று கொள்ளக்கூடிய வழிமுறைகள் கலந்துறையாடப்பட்டன.
1. பலமான மக்கள் சக்தியை உருவாக்கி தனித்து போட்டியிட்டு பிரதிநிதியை பெற்று கொள்ளல். அல்லது பலமான மக்கள் சக்தியை உருவாக்கி கட்சிகளினூடாக தொகுதிக்கான பொறுப்பு கூறும் பிரதிநிதியை உறுதிப்படுத்திகொள்ளல்.
2. இறுதி இத்தீர்மானங்களை மக்களில் இருந்து உருவாக்கப்படுகின்ற மாவட்ட தலைமைத்துவ சபை தீர்மானித்தல்.
அத்துடன் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும கேள்வி பதில்கள் என்பனவும் கலந்துரையாடப்பட்டது.
இத் தூய்மையான வேலைத்திட்டத்தின் தேவையை உணர்ந்த பிரதேச மக்கள் PPAF உடன் இணைந்து செயல்பட முன்வந்தனர்.





0 Comments