Subscribe Us

header ads

முன்னாள் பிரதி அமைச்சர் காலமானார்

முன்னாள் பிரதி அமைச்சர் எச்.பீ. அபேரட்ன மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

குருநாகல் வைத்தியசாலையில் வைத்து அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவரது வயது 78 எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அபேரட்ன பிரதி அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான லலித் அதுலத் முதலியா காமினி திஸாநாயக்க ஆகியோரினால் உருவாக்கப்பட்ட ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு தெரிவானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Post a Comment

0 Comments