பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இறக்காமம் ஜீ.சி.எம். அமைப்புக்கு ஒரு தொகுதி ஒலி பெருக்கி கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜீ.சி.எம். அமைப்பின் தலைவர் எம்.றவுசான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு இந்த ஒலி பெருக்கி கருவிகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.ஜபீர் மௌலவி, ஜீ.சி.எம் அமைப்பின் முன்னாள் தலைவர் என்.நுசைர், எப்.எப்.சீ.ஆர். அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான பாறூக் சாஹிப் மற்றும் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




0 Comments