கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சிற்குள் அத்து மீறி சென்ற பிக்குமார் ஆறுபேருக்கும் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு, மஜித்திரேஸ்ட் நீதிமன்றம் இவர்களுக்கு எதிர்வரும் 12 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்களுக்கு அழைப்பாணை அவசியம் இல்லை, இந்த சந்தேக நபர்களை கைது செய்யவே நாம் நீதிமன்றை கோரியபோதும், அதற்கு இணங்காத மஜிஸ்ரேஸ்ட் திலின கமகே, கைது செய்யக்கூடிய குற்றம்தான் என்றாலும், அவர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று தெரிவித்ததாக சட்டத்ததரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
கடந்த 2014 ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆயினும் இந்த வழக்கில் பொலிஸார் பக்கச் சார்பாக செயற்பட்டதால் தொடர்ந்து வழக்கு இழுத்தடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாம் தொடந்தும் பொலிஸாருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த வழக்கை தொடந்து முன்னெடுக்க அவர்கள் விருப்பம் காட்டியதாகவும், அதன் பிரதிபலனாகவே இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்ததரணிகளான மைத்திரி குணரத்தன, சிராஸ் நூர்தீன் மற்றும் சரத் சிறிவர்தன ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments