கழகங்கள் , சங்கங்கள் , சமூக நல அமைப்புகளுக்கான தலைமைத்துவம் குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது...
பள்ளிவாசல்களின் தலைமைத்தும் குறிப்பிட்ட மஹல்லாவாசிகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றது...
ஒரு குடும்பத்துக்கான மண மகன் அல்லது மண மகள் தெரிவு அந்த குடும்பத்தின் உறுப்பினர்களாலேயே கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படுகின்றது...
இவ்வாறு சமூகத்தின் அனைத்து ம(க)ட்டங்களிலும் தலமைத்துவம் அதனைச்சார்ந்த மக்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.
ஆனால் அரசியலை பொருத்தவரையில் ஒருவர் வருவார் நான் இந்த கட்சிய சார்ந்தவர் நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுகின்றேன் எனக்கு நீங்கள் வாக்களியுங்கள் என்பார்.
இன்னொருவர் வருவார் நான் இந்த கட்சியை சார்ந்தவர் நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுகின்றேன் எனக்கு நீங்கள் வாக்களியுங்கள் என்பார்.
இப்படி ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் இவர்கள் மாறி மாறி வந்து கொண்டே இருப்பார்கள்.
நாம்தான் ரொம்ப பாசக்காரங்களாச்சே……
இன மத மொழி பிரதேசம் சுயநலம் பாராது எல்லோருக்கும் வாக்கை கொடுப்போம்.கடைசியில் மிஞ்சுவது வழமைப்போன்று அரசியல் ரீதியான எதிர்காலத்திற்கான கேள்விக்குறியே.ஆனால் வாக்கு கேட்டு வந்தவர்கள் தம் கட்சியின் ஊடாக ஏதேனும் பதவிகளை பெற்றுக்கொண்டு சொகுசு வாழ்க்கை அனுபவிப்பார்கள் .நாம் ஏனைய பிரதேசங்களை வாய் பார்த்துக்கொண்டிருப்போம்.அ டுத்த தேர்தல் வரும் மீண்டும் வருவார்கள்,இதே நிலை தொடரும்.
இந்த நிலை மாற வேண்டும்.மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும்.எல்லா விடயங்களிலும் எமக்கான தலைமைத்துவத்தை நாமே தீர்மானிக்கும் நாம் அரசியல் தலைமைத்துவத்தையும் நாமே தீர்மானிக்க வேண்டும்,எந்த கட்சியின் ஊடாக இருந்தாலும் சரி நிருவனமயப்படுத்தப்பட்ட மக்களுக்கு பொருப்பு சொல்லக்கூடிய அரசியல் தலைமைத்துவம் எம்மிலிருந்தே உருவாக வேண்டும்.எமது சக்தியின் ஊடாகவே பாரளுமன்றம் கிடைக்க வேண்டும்.
இதற்கான வேலைத்திட்டதையே கடந்த காலங்களில் PPAF மேற்கொண்டு வருகின்றது.இவ் முயற்சியில் யாவரும் பங்காளர்களாக மாறுவதன் மூலம் நாம் 3 தசாப்தமாக இழந்து வந்துள்ள பாராளுமன்ற பிரதிநித்துவத்தை மிக இலகுவாக பெற்றுக்கொள்வோம்.


0 Comments