தானே அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் எனும்
திட்டத்திலேயே பசில் ராஜபக்ச நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும்
பெரும்பாலும் அனைத்து அமைச்சர்களும் அச்சத்திலேயே வாழ்ந்து வந்ததாகவும்
தெரிவிக்கிறார் முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்
வைத்தே நேற்றைய தினம் இவ்வாறு தெரிவித்துள்ள அவர், பொருளாதார
அபிவிருத்தியமைச்சு எனும் ஒரு அமைச்சை உருவாக்கி அனைத்து அபிவிருத்தி
நடவடிக்கைகளையும் அவருக்கு ஊடாகவே இடம்பெறும் வகையில் செய்து கொண்ட பசில்
ராஜபக்ச, தேசிய அமைப்பாளராகவும் இருந்ததனால் அமைச்சர்கள் யாரும் அவருக்கு
எதிராக வாய் திறக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் இறுதிக் கட்டங்களில்
மஹிந்த ராஜபக்சவும் அவரது பேச்சைக் கேட்டே செயலாற்ற ஆரம்பித்ததனால்
கட்சியில் பசில் ராஜபக்சவுக்கு எதிராக எதையும் பேச முடியாத நிலை
உருவாகியிருந்ததாகவும் தெரிவித்துள்ள அவர், அடுத்த ஜனாதிபதியாக தானே வர
வேண்டும் என்ற திட்டத்திலேயே பசில் ராஜபக்ச செயலாற்றி வந்ததாகவும்
தெரிவிக்த்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மஹிந்தவின் தேர்தல்
தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் என முன்னாள் அமைச்சர்கள் தொடர்ச்சியாக
குற்றஞ்சுமத்தி வருகின்றமையும் தேர்தல் முடிந்த கையோடு பசில் ராஜபக்ச
அவசரமாக நாட்டை விட்டு வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments