Subscribe Us

header ads

இனி வெயில நிக்கத் தேவை இல்லை!இலங்கையருக்கு On Arrival Visa வழங்க இந்தியா பச்சை கொடி!!


இலங்கைக் கடவுச்சீட்டில் இந்தியா பயணிப்பவர்களுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் (On Arrival Visa) நடைமுறையினை இரு கட்டங்களாக அமுல்படுத்துவதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக ஜனாதிபதியின் இந்திய பயண ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை வரும் இந்தியர்களுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் இலங்கைக் கடவுச்சீட்டுக்களுக்கு முன்கூட்டிய விசா பெற்றே பயணிக்க வேண்டிய நிலையும் குறிப்பாக வெளிநாடுகளில் குடியிருக்கும் இலங்கையர்கள் இதன் மூலம் பாரிய அசௌகரியங்களையும் சந்தித்து வருகின்றனர். இலங்கைக் கடவுச்சீட்டுக்கு விசா வழங்குவதற்கு வெளிநாடுகளின் சிலவேளைகளில் ஒன்றரை மாதங்கள் வரை இழுத்தடிப்பும் நிகழ்ந்து வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில், முதற்கட்டமாக அரச அதிகாரிகளுக்கு இச்சலுகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின் இரண்டாம் கட்டமாக பொது மக்களுக்கும் விமான நிலையத்தில் வைத்தே விசா வழங்குவதற்கான நடைமுறை அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments