Subscribe Us

header ads

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி


இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சுமையற்ற வாழ்க்கைச் செலவு, ஊழலற்ற நிர்வாகம், ஊடக சுதந்திரம் என்பவற்றுடன் நல்லாட்சி நோக்கிய பயணத்தில் 67வது சுதந்திர தினம் மலர்ந்துள்ளது.

சுதந்திரத்தைப் பாராட்டுவதா நாட்டுக்கு சுதந்திரத்தின் அர்த்தத்தைப் புரிய வைத்த அரசைப் பாராட்டுவதா? என்ற மகிழ்ச்சிகளுக்கு மத்தியில் பிறந்துள்ள சுதந்திர தினம் நாட்டின் அனைத்து மட்ட மக்களது வாழ்விலும் நம்பிக்கையையும் புத்துணர்வையும் ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறோம்.

சுதந்திரம் என்பது மக்களது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டதாகும். சுதந்திர தினம் என்பது சுதந்திர உணர்வுகளை மீட்டுகின்ற ஒரு தினம் மட்டுமே. அதிகமான சுதந்திர தினங்கள் சுதந்திர உணர்வுகளை மீட்ட முடியாத தினங்களாகவே கடந்து சென்றிருக்கின்றன. தலைவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவார்கள். மக்கள் சுதந்திரமின்றி திண்டாடுவார்கள். 67வது சுதந்திர தினம் அவ்வாறன்றி மக்கள் தம் சுதந்திர உணர்வுகளை மகிழ்வுடன் வெளிப்படுத்தும் தினமாக மலர்ந்துள்ளது. சுதந்திரம் இந்நாட்டு மக்களின் நிரந்தரச் சொத்தாக என்றும் இருக்க வேண்டும்

புதிய அரசு மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்க்கைகளையும் இதுவரை புறக்கணிக்காதது போல் தொடர்ந்தும் அவற்றை மதித்து செயற்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய அரசின் நிகழச்சி நிரலில் நாட்டுக்கும் மக்களுக்குமே இனி இடமுண்டு என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை சுதந்திரதினச் செய்தியில் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். அது அவ்வாறு தொடர்ந்தும் இருக்க எமது பிரார்த்தனைகள்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

Post a Comment

0 Comments