Subscribe Us

header ads

ஆற்றின்மீது தரையிறங்கியது தைவான் விமானம்


தைவான் நாட்டின் ட்ரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, தைபெய் ஆற்றின் மீது தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது ஐம்பது பேர் விமானத்தில் இருந்தனர். இந்தச் சம்பவத்தில் பத்துப் பேருக்குக் காயம் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த விமானம் கீலங் ஆற்றில் கிட்டத்தட்ட மூழ்கிப்போன நிலையில் இருக்கும் படம் ஒன்றை தைவானின் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ட்ரான்ஸ் ஏசியாவின் விமானம் ஒன்று மோசமான வானிலையின் காரணமாக பெங்கு தீவுக் கூட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.

தற்போது, விமானம் அவசரமாக ஆற்றில் தரையிறங்கியிருப்பதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த ஏடிஆர் - 72 ரக விமானம், தைபெய்யின் சோங்சான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தைவானின் புறநகரில் இருக்கும் கின்மென் விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தது.

இந்த விமானத்தில் இருந்தவர்கள் பலர் மீட்கப்பட்டு, அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் விமானத்தில் சிக்கியிருப்பதாகவும் உள்ளூர் செய்தி சேனல்கள் தெரிவிக்கின்றன.-BBC-

Post a Comment

0 Comments