ACJU/NGS/009/2015
28.01.2015
28.01.2015
எமது தாயகம் ஸ்ரீ லங்கா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளைத் தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைகிறது.
கடந்த 67 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்காக எமது நாடு பல்வேறுபட்ட சவால்களை காலத்திற்கு காலம் சந்தித்து வந்துள்ளது.
அனைத்து இலங்கையரும் சமாதானத்தோடும்,சகவாழ்வோடும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று உறுதி கொண்டுள்ள நிலையில் இவ்வருட சுதந்திர தினத்தை நாம் நினைவுபடுத்துகின்றோம்.
பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு செழிப்புடனும் அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனைகளுமாகும்.
ஒரு நாட்டின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் அந்நாட்டு மக்களின் ஒற்றுமையிலும் நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது. அந்த வகையில் நாட்டுப்பற்றையும் சமூகங்கள் மற்றும் சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்க்கமான ஒரு சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் இருக்கின்றோம்.
எனவே இந்நாட்டில் ஒற்றுமை, சமாதானம், சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்பு,நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


0 Comments