Subscribe Us

header ads

13 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன "பிகாசோ" ஓவியம் கண்டுபிடிப்பு


பிரான்சில் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன பிகாசோ ஓவியம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் கடந்த 1911ம் ஆண்டில் பிகாசோ வரைந்த ஓவியம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2001ம் ஆண்டில் திருட்டு போன இந்த ஓவியத்தை கண்டுபிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் பயனில்லாமல் போனது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெல்ஜியம் நாட்டிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு பொட்டலம் ஒன்று அனுப்பப்பட்டது.

அதனை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டதில், அது பிகாசோவின் ஓவியம் என்றும் பாரிசில் இருந்து திருடப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

இந்த ஓவியம் பெல்ஜியத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து அமெரிக்க பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Post a Comment

0 Comments