தென் ஆப்ரிக்காவில் பிறந்து மூன்று நாட்களிலேயே காணாமல் போன குழந்தை ஒன்று தற்போது பெற்றோருடன் இணைந்துள்ளது.
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனை(Cape town) சேர்ந்த செலஸ்ட்- மோர்னே(Celeste-Morne) என்ற தம்பதியினருக்கு கடந்த 1997ம் ஆண்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் பிறந்த மூன்று நாட்களிலேயே திருடப்பட்ட இக்குழந்தையை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் பிறந்தன. எனினும் காணாமல் போன குழந்தைக்கு ஷெபானி(Zephany) என்று பெயர் சூட்டி ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளை கொண்டாடி வந்துள்ளனர்.
இதற்கிடையே ஷெபானி படிக்கும் பள்ளியில் இவர்களது இளைய மகள் காசிடி நர்ஸ்(Cassidy Nurse) படித்து வருகிறாள்.
அவர்களது இருவரின் முக சாயலும் அச்சு அசல் ஒன்றாகவே இருந்ததால் இதுகுறித்து விசாரிக்கப்பட்டது.
அப்போது தான், ஷெபானி கடத்தப்பட்டு பல்வேறு இடங்களில் வேறு பல பெண்களால் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது.
மேலும் மரபணு பரிசோதனை செய்து பார்த்த போது, அவள் செலஸ்ட்- மோர்னே தம்பதியின் மகள் என்பது உறுதியாகியுள்ளது.
சுமார் 17 வருடங்களுக்கு பிறகு தங்களது மகளை கண்டுபிடித்த பெற்றோர் ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.




0 Comments