Subscribe Us

header ads

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதலின் பொது ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்.(VIDEO)

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தீவிரவாத தாக்குதலில் பலரது உயிரை இஸ்லாமியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். பிரான்சில் கிழக்கு பாரிஸ் பகுதியில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டிற்குள் கடந்த வெள்ளியன்று நுழைந்த தீவிரவாதி ஒருவன் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.

அப்போது தீவிரவாதியிடமிருந்து பலரையும் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவரை பற்றி பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாலியை தாய்நாடாக கொண்ட 24 வயது இஸ்லாமிய இளைஞரான லஸ்ஸானா பதிலி, சம்பவம் நடந்த  சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.

சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியவுடன் கடைக்குள் இருந்த 15 வாடிக்கையாளர்களை அடித்தளத்திலுள்ள ஸ்டோர் ரூமிற்கு கொண்டு போய் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லி பாதுகாப்பாக வைத்துள்ளார்.

நான்கு மணி நேரம் கழித்து தீவிரவாதிகள் சோதனையிட வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லிப்ட் வழியாக மாடிக்குப் போய் தப்பிக்கலாம் என்று அவர்களிடம் யோசனை கூறியுள்ளார்.

மக்கள் லிப்ட் இயங்கும் சத்தம் கேட்டு தீவிரவாதி சுடத் தொடங்கி விட்டால் இறந்து விடுவோம் என்று பயந்து வர மறுத்ததால் தைரியமாக பதிலி மட்டும் தப்பித்து வெளியேறியுள்ளார்.

தீவிரவாதி உள்ளே இருந்ததால் இரு கைகளையும் தூக்கியபடி வெளியே வந்த பதிலியை, காவல்துறையினர் கைது செய்து வைத்திருந்தனர்.

பின்னர் காவல்துறைக்கும் தீவிரவாதிக்கும் இடையே நடந்த தாக்குதலில் தீவிரவாதியும் 4 பணயக் கைதிகளும் பலியாகினர்.

உயிர் பிழைத்த பணயக் கைதிகள் ஓடி வந்து பதிலியைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினர்.

சமூக வலைதளத்தில் தற்போது நாயகனாக போற்றப்படும் பதிலியின் வீரத்திற்குப் பரிசாக பிரான்சின் மிக உயரிய விருதான ‘லீஜியன் ஆப் ஹானர்’ அல்லது பிரெஞ்சு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

Post a Comment

0 Comments