இந்த நாட்டில் அரசனாக அல்லாது ஒரு சிறந்த மனிதனாக இருந்து சேவையாற்ற விரும்புகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சற்று முன்னர் தெரிவித்தார்.
கண்டியிலுள்ள தலதா மாளிகையின் வளாகத்திலிருந்து சற்று முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நான் போட்டியிட்ட முதலாவது ஜனாதிபதித் தேர்தலும் இறுதி ஜனாதிபதித் தேர்தலும் இதுவாகும். இந்த நாட்டு மக்களுக்கு தேர்தலின் போது வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். மக்களின் வறுமை, பொருட்களின் விலைச் சுமை, வாழ்க்கைச் சுமை அனைத்தினாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். எமது அரசின் முதலாவது நடவடிக்கையாக இந்த வறுமை நிலையை நீக்கி மக்களின் பொருளாதார நிலைமையை ஸ்தீரப்படுத்த தேவையான முன்னெடுப்புக்களை எடுக்கவுள்ளோம்.
நிறைவேற்று ஜனாதிபதியிடம் உள்ள மிகைத்த அதிகாரங்களை பாராளுமன்றத்திடமும், அமைச்சரவையிடமும், நீதிமன்றத்திடமும், சுயாதீன ஆணைக்குழுக்களிடமும், அரச துறையினரிடமும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.


0 Comments