பைஷல் இஸ்மாயில் -
சவூதி அரேபிய மன்னரின் மறைவையொட்டி கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இரங்கல் செய்திப்பதிவேடொன்று இன்று (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் தனது இரங்கள் செய்தியினை எழுதுவதற்காக ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேன முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நஸீர் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உள்ளிட்டோர் இன்று (23) காலை கொழும்பிலுள்ள சவூதிஅரேபிய தூதுவராலயத்திற்கு விஜயம் செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த குறித்த பதிவேற்றில் தங்களின் இரங்கல்செய்தியை பதிவு செய்தனர்.



0 Comments