இன்று வெள்ளிக்கிழமை பெரிய பள்ளி ஜும்மா தொழுகையின் பின் ஊர் நலன் விரும்பிகள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஊர் மக்களிடையே விநியோகிப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு :
கல்பிட்டி கோட்டத்துக்கே உரிய ஒரேயொரு தேசிய பாடசாலையென்றால், அது அல் - அக்ஸாவே ஆகும். இலவசக் கல்வி தந்தையான C.W.W கன்ணங்கராவின் சிபாரிசுக்கு அமைய 1946 ம் ஆண்டில் உருவாகிய இப்பாடசாலை மகாவித்தியாலம், முன்னோடிப்பாடசாலை, மத்திய கல்லூரி, தேசிய பாடசாலை எனப் பல்வேறு தர உயர்வுகளைப் பெற்று வந்தது.
இவ்வாறான சூல்நிலையிலேயே கடந்த அரசாங்கத்தின் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டம் என்ற யாருமே முழுமையாக அறியாத மாயைக்குள் தள்ளப்பட்டுவிட்டது. 1000 என்பது ஒரு கற்பனையான சுவர்க்கலோகப் பாடசாலையையும் பல கோடி ரூபா அபிவிருத்தியுமென முன்னால் நிர்வாகத்தினால் பாமர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்காக ஆரம்ப கல்வியை தலை முழுக வேண்டுமென கொந்தராத்தும் விதிக்கப்பட்டது. இதற்காக சாணக்கியமற்ற எமது அரசியல் தலைமைகளும் சோரம் போய்விட்டன. தலை இல்லாமல் ஒரு உடம்பை வளர்ப்பதென்பது குறைபாடுடையதாகவே அமையும். இவ்வாறானதொரு நிலையே இன்று அல் - அக்ஸாவிற்கு ஏற்பட்டுள்ளது . இவை அனைத்தும் கடந்த அரசாங்கம் உலக வங்கியில் பெற்ற கடனுக்கான நாடகமாகும். இது எமது ஊருக்காகன சாபக் கேடாகும். இடவசதி போதாத, கல்பிட்டிக்கு அண்மித்த சில கிராம பாடசாலைகளுக்கு இது பொருத்தம் ஆகலாம். ஆனால் இன்னொரு பாடசாலையைக் கூட அமைக்க்கூடிய 10 ஏக்கர் இடைப்பரப்பைக் கொண்ட அல் - அக்ஸாவிற்கு இவ்வாறானதொரு நிலைமை தேவையா? நாம் சிந்திக்க வேண்டும்.
அல்-அக்ஸாவின் ஆரம்பப் பிரிவு வடஆமல் மாகாணத்திலேயே போற்றப்படக்கூடிய முன்மாதிரியான அழகிய சுற்றாடலையும் கொண்ட உதாரணமென 2012 ம் ஆண்டிலே வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் அறிக்கை சான்று பகுர்கிறது. இவ்வாறானதொரு நிலைமையில் கல்பிட்டிவாசிகள் அனைவரும் இலகுவாக வரக்கூடிய கல்பிட்டி நகர மத்தியில் அமையப்பெற்ற ஆரம்பப்பிரிவை இல்லாமல் செய்ய வேண்டுமா?
கடந்த வருடம் தரம் 1,2 இல்லாததால் ஏற்பட்டுள்ள தீமைகள் :
1. சிறிய பாடசாலைகளுக்கு நாளாந்தம் பல நூறு ரூபாய்களை செலவு செய்து செல்ல வேண்டிய நிலைமை.
2. பெற்றோர்கள் இரண்டு பாடசாலைகளுக்கும் அலைய வேண்டிய நிலைமை.
03. பெற்றோர்கள், பிள்ளைகள் மன உளைச்சலுக்குள்ளாகிய நிலைமை.
04. தரம் 5 புலைமைப் பரீட்சையில் வீழ்ச்சி.
05. சர்வதேச பாடசாலை அனுமதி அதிகரித்தமை.
06. அல் - அக்ஸா ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மனச் சோர்வு.
07. ஏனைய பாடசாலையின் மாணவர்கள் இடை நிறுத்தப்படல்.
இவ்வாறான பிரச்சினைகளை முன்கூட்டியே உணர்ந்த பாடசாலைகள் (1000)
ஆயிரத்தையும் பெற்றுக்கொண்டு தீர்க்கதரிசணத்துடன் ஆரம்பப் பிரிவையும் தக்க வைத்துக் கொண்டன. உதாரணமாக மன்னார் எருக்கலம்பிட்டி தேசிய பாடசாலையைக் கூறலாம். எமமைப் போன்று சிக்கித் தத்தளிக்கும் பாடசாலைகள் புதிய அரசியல் மாற்றத்தின் போராட்டத்தில் குதித்து வெற்றி இலக்கை அண்மித்து விட்டனர். (உதாரணம்) ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம், சாலிய வெவெ சிங்கள மகா வித்தியாலயம், புத்தள ஆனந்தா தேசிய பாடசாலை போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான எமது பிரதேசத்தின் நிலைமைக்கு காரணமாக அமைவது சாணக்கியமற்ற அரிவற்ற அரசியல் தலைமைத்துவங்களும் எமது பிரதேசத்தில் காணப்படுகின்றமையால் ஆகும். அரசியலுக்காக கல்வியை விட்டுக் கொடுப்பதல்ல, கல்வியைப் பெற்றுக் கொடுப்பதும் கல்விச் சமூகத்தை உருவாக்குவதே எமது பொறுப்பாகும்.
எனவே இனியும் நாம் ஏமாறாமல் ஒன்றினைந்து அல் - அக்ஸாவின் ஆரம்ப பிரிவை மீளப்பெற்று எமது சமுதயாத்தின் விடிவுக்காக் குரல் கொடுப்போமாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கு அருள் புரிவானாக! ஆமீன்.
இவ்வண்ணம்
ஊர் நலன் விரும்பிகள்.
-Notice Picture From: M.Nilufar-



0 Comments