உலக முஸ்லிம்களின் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்த சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் மறைவு சகல முஸ்லிம்களுக்கும்,முஸ்லிம் தேசங்களுக்கும் பேரிழப்பாகும்.
முஸ்லிம் நாடுகள் மட்டுமல்லாது உலகில் உள்ள வறிய நாடுகள் அனைத்திற்கும் சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவி ஒத்தாசைகளை விரிவுபடுத்தி வழங்கியதில், மன்னர் அப்துல்லா அவர்களின் பங்கு அளப்பரியதாகும்.
மன்னர் அப்துல்லா அவர்களின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசுக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் கணிசமான உதவிகளை வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மறைந்த மன்னர் அப்துல்லா 2005ல் மன்னரானார். ஆனால் அவர் அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சவூதி அரேபியாவின் நடைமுறை ரீதியிலான தலைவராக இருந்தார்.
மன்னர் அப்துல்லா சவூதி அரேபியாவுக்குச் செய்த சேவைகள் , அமைதிக்கு அவர் காட்டிய உறுதிப்பாடு மற்றும் மதங்களுக்கிடையே புரிந்துணர்வை பலப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக என்றும் உலக மக்கள் இதயங்களில் நிலைத்திருப்பார்.
மன்னர் அப்துல்லாஹ் அவர்கள் தனது பதவிக் காலத்தில் சவூதியின் எண்ணெய் வளம் தொடர்பான கல்வி மற்றும் உட்கட்டமைப்பு செயற்திட்டங்களையும் நன்கு திட்டமிட்டு மேம்படுத்தினார்.
மேலும் சவூதி அரேபியாவில் உள்ள பல பள்ளிவாசல்களின் சேவகராகவும்,போசகராகவும் மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பணியாற்றியிருப்பது குறிப்பிடதக்கதாகும்.
சவூதியில் நடைமுறையில் இருக்கும் சொற்ப அளவிலான தேர்தல்களில் பெண்களுக்கான வாக்குரிமை,ஏனைய தனி மனித உரிமைகளை பேணியமை போன்ற சீர்திருத்தங்களை மன்னர் அப்துல்லா அவரது ஆட்சிக்காலத்தில் செய்திருக்கிறார்.
மேலும்,மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் வியன்னாவில் தலைமையகத்தை உருவாக்கி அதன் தலைவராகவும் மன்னர் அப்துல்லாஹ் செயற்பட்டு வந்திருக்கிறார். இலங்கை மீது தனிப்பட்ட அன்பையும் மதிப்பையும் மன்னர் அப்துல்லாஹ் கொண்டிருந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் செயல்களை பொருந்திக்கொள்வானாக. அனைத்து முஸ்லிம்களும் அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காய் இருகரமேந்தி பிரார்த்திப்போம்.


0 Comments