சம்மாந்துறை தேசிய பாடசாலையில் 200 வருட காலமாக விழுதுகள் பரப்பி நிலைத்து நின்ற ஆல
மரம் ஜனவரி முதலாம் திகதி குடை சாய்ந்துள்ளது.இதன் சாய்வினை சம்மாந்துறை மக்கள்
பாரிய இழப்பாக கருதுகின்றனர்.
சம்மாந்துறை தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற
மாணவர்கள் தங்கள் பாடசாலை நிகழ்வுகளை மீட்டிப் பார்க்கும் போது இதன் விழுதுகளில்
ஊஞ்ச லாடிய நினைவுகளினை மீட்டிப்
பார்காமல் இருக்கமாட்டார்கள். இம் மரம்
வீழ்ந்ததனை கேள்வியுற்ற பலரும் மரணித்த ஒருவரைப் பார்க்கச் செல்லுவது
போன்று அணி திரண்டு பார்க்கச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.





0 Comments