வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஆள் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகின்றது.
வாக்களிக்கத் தகுதி பெற்று, தேர்தல்கள் திணைக்களத்தினால் அனுமதிக்கப்படும் அடையாள அட்டைகள் எந்தவொன்றும் இல்லாதிருப்பவர்கள் அல்லது தெளிவில்லாத அடையாள அட்டையையுடையவர்கள் கிராம அலுவலர்கள் ஊடாக இரு புகைப்படப் பிரதிகளுடன் இதற்காக விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்தது. இதற்கான கால அவகாசமே இன்றுடன் முடிவடைகின்றது.
ஏற்கனவே, 30 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த இதற்கான கால எல்லை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று (2) வரையுள்ள காலப்பகுதியில் இரண்டு லட்சம் தேசிய ஆள் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்.


0 Comments