(by.கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،،
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி
01-01-2015 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால்
அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு
!!!
ஒவ்வொரு வியாழன் தோறும் மாலை 8:30 முதல் 9:30 வரை நபிகளார் வாழ்க்கை வரலாறுத்
தொடர் மற்றும் மிகவும் பிரயோசனமான தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் "எதிர்காலம் பற்றிய அச்சம் போக்கும் இறையச்சம் " என்ற தலைப்பில்
பிரதான உரை நடைபெறும்.
இவ் விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் ஜபருல்லாஹ்கான் ( அன்வாரி)
நிகழ்த்துவார்.
அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும்
ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள்
/ தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.
பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


0 Comments