ஷாங்காயில் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாட கூடியிருந்த மக்களுக்கு இடையே ஒரு கட்டடத்தில் இருந்து கொட்டிய போலி பண நோட்டுக்களை எடுக்கச் சென்ற மக்கள் நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
புத்தாண்டு பிறப்பை கொண்டாட ஆயிரக்கணக்கானோர் ஓரிடத்தில் கூடியிருந்த போது, அங்கு சில விஷமிகள் கட்டடத்தின் ஜன்னலில் இருந்து போலி பண நோட்டுகளை வீசினர்.
அதனை எடுப்பதற்காக ஒரே இடத்தில் ஏராளமானோர் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு, கீழே விழுந்த பலரையும் பொதுமக்கள் மிதித்துக் கொண்டு முன்னேறிச் சென்றதில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
சுமார் 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


0 Comments