க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் வினாத் தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் பாடசாலைகள், ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் தவிரவுள்ள ஏனைய சகல அரச பாடசாலைகளும் நாளை மறுதினம் (5) திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பின்னர், எதிர்வரும் 7 , 8 , 9 ஆம் திகதிகளில் மீண்டும் தேர்தலுக்காக பாடசாலை மூடப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வினாத்தாள் திருத்தும் பணிக்காகவும், தேர்தல் பணிக்காகவும் பயன்படுத்தப்படும் அரச பாடசாலைகள் ஜனவரி 12 ஆம் திகதி முதலாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படவுள்ளது.
பரிசுத்தப் பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 48 பாடசாலைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் மூடப்படும் எனவும் இந்தப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 16 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.


0 Comments