Subscribe Us

header ads

மஹிந்தவை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்: விக்ரமபாகு கருணாரட்ன


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நிச்சயமாக வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு தமிழ் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது.

அவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களித்தாலும், மஹிந்த தோல்வியைத் தழுவுவார். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவுவார் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என சிங்கள ஊடகமொன்று தொலைபேசி மூலமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மக்களின் ஆதரவு முழுமையாக மைத்திரிபாலவிற்கு என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாகவே கொழும்பு வாழ் தமிழ் மக்கள் யாருக்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பது புலனாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தமழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments