கிளிநொச்சி மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் இன்று மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வாக்களிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரின் விசேட அனுமதிக்கமைய தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு மேலும் ஒரு நாள் இறுதியாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை கிளிநொச்சியில் கடமையாற்றும் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 16799 பேர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாக்குச்சீட்டுக்கள் வந்திருந்தது. அதில் 15416 பேர் டிசெம்பர் 23, 24 அம் திகதிகளில் தங்களது அலுவலகங்களில் வாக்களித்திருந்தனர்.
தவறியோர் டிசம்பர் 26 ஆம் திகதி வழங்கப்பட்ட விசேட தினத்தில் வாக்களித்திருந்தனர். எஞ்சியோர் 30 ஆம் திகதி வாக்களித்திருந்தனர். மிகுதியான 266 பேரே ஜனவரி 3 ஆம் திகதி இறுதியாக வழங்கப்படும் விசேட தினத்தில் வாக்களிக்கவுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ். மாவட்டத்தை விட கிளிநொச்சி மாவட்டத்தில் 4000 தபால் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments