சிங்கள பௌத்தர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு வழங்க முடியாது என்ற காரணத்தினால் ஹக்கீம் எதிர்த் தரப்பிற்கு தாவினார்.
பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளித்த காரணத்தினால் முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியை விட்டு விலகவில்லை.
முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக அலகு வழங்க ஜனாதிபதி இணங்கியிருந்தால் ஹக்கீம் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருப்பார்.
ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதின் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தேசத்துரோக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.
சிங்கள பௌத்தர்கள் இந்த கூட்டணியை தோற்கடித்து மஹிந்தவை பாதுகாத்து அவரை வெற்றியீட்டச் செய்ய வேண்டுமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
“உங்களது நடவடிக்கைகள் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்க இணங்கினார்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றார்களே உண்மையா? என சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.


0 Comments