பாகிஸ்தான் நாட்டில் கடந்த டிசமபர் 16-ந்தேதி பெசாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் நுழைந்த 6 தீவிரவாதிகள் அங்கு இருந்த மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஊழியர்கள் உள்பட 157 பேரை மிருகத்தனமாக சுட்டு கொன்றனர்.
இந்த தாக்குதலில் பலியான மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு வீரதீர செயலுக்கு உரிய பதக்கம் (தம்கா இ-சுஜாத்) வழங்க பாகிஸ்தான் ஜனாதிபதி மாம்னூன் ஹூசைன் முடிவு செய்து உள்ளார். இந்த விருது தீவிரவாதிகள் தாக்குதலில் மரணம் அடைந்த அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கும் விருது ஆகும். அதுபோல் பெசாவர் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கும் சில விருதுகள் வழங்க முடிவு செய்யபட்டு உள்ளது.
இதற்கான அறிக்கையை தயார் செய்து மத்திய மந்திரி சபைக்கு ஜனாதிபதி அலுவலகம் அனுப்பி வைத்து உள்ளது. என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தம்கா-இ-சுஜாத் விருது டிசம்பர் 2009 -ல் பெஷாவர் பிரஸ் கிளப் வாசலில் ஒரு தற்கொலை படைதக்குதலில் பலியான ஒரு போலீஸ்காரருக்கும் வழங்கபட்டு உள்ளது.


0 Comments