ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற அரச அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தயாராகி வருகின்றன.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு இணைப்பாளர்கள் போன்றோருடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


0 Comments