பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது அதன் ஏற்பாடுகளை மிக சிறப்பாக அர்ப்பணிப்புடன் செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வைபவம் நேற்று கொழும்பில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள , நிதி அமைச்சர் ரவி ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உறையாற்றிய காதினல் மல்கம் ரஞ்சித் அவர்கள். பாப்பரசர் இலங்கை விஜயத்தை சிறப்பாபக நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பாக மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகின் பல நாடுகளுக்கு பல தரப்பட்ட நாட்டு தலைவர்களையும் சந்தித்துள்ளதாகவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவைர்களை போன்ற மென்மையான நாட்டு தலைவரை இதுவரை தாம் சந்தித்தது இல்லை என பாப்பரசர் தம்மிடம் குறிப்பிட்டதாக காதினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Comments