Subscribe Us

header ads

சஜித் பிரேமதாஸவை ஆளும் கட்சிக்குள் ஈர்க்க முயற்சி


தொடர்ந்தும் கட்சி மாறல் காரணமாக தேர்தல் பரப்புரைகளில் பின்னடைவை கண்டுவரும் அரசாங்கத் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்து முக்கியமான ஒருவரை ஆளும் தரப்புக்கு இறுதி 11வது மணித்தியாலத்தில் கொண்டு வருவதன் மூலம் தமது தரப்புக்கு மக்கள் செல்வாக்கை கொண்டுவர முடியும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸவை ஆளும் கட்சிக்குள் உள்ளீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸும், மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவும ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள நிபந்தனையை ஏற்றால் ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் வலுப்பெறும் என்று அரசாங்கத்தரப்பு அச்சம் கொண்டுள்ளது.
தாம் ஆளும் தரப்புக்கு வந்தவுடனேயே தமக்கு பிரதம மந்திரி பதவி வழங்கப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாஸ நிபந்தனை விதித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சஜித் பிரேமதாஸவின் இந்த செயல் அரசாங்கத்தை மேலும் செயலிழக்கச் செய்யும் எதிரணியின் செயலாக இருக்குமோ என்ற அச்சமும் அரசாங்கத் தரப்பில் எழுந்துள்ளது .
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் இருந்து எதிரணிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசாங்கத்தரப்பு கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையையும் இழந்துள்ளது.

Post a Comment

0 Comments