சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டமறு நொடிமண்ணெய், டீசல், பெற்றோல் என கணிய எண்ணெய் குடும்பத்தினது விலைகளும் குறைக்கப்படுகிறது. விலைகள் திடீர் திடிரென குறைக்கப்பட காரணம் தேடிப்பார்த்தால் சிறுவர்களும் சொல்வர்
தேர்தல்கள்தான் என்று. அவ்வளவு பரீட்சயம்.
வானப்பட்சிகத்திக்கொண்டு தாழ்வாக பறக்க, எறும்புகள் உணவுகளை சேகரித்துக் கொண்டு தமது புற்றுக்களுக்கு விரைவாக செல்லும். இவைகள் மழைவருவதற்கான அறிகுறிகள். அதுபோலவேதான் பொருட்கள், சேவைகளின் விலைகள் குறைக்கப்படுவதும், சலுகைகள் விடப்படுவதும் தேர்தல் வருவதற்கான சில அறிகுறிகள்.
தேர்தல் காலங்களில் பொருட்கள், சேவைகளின் விலைகளை குறைக்கும் போது ஏன் மற்றைய காலங்களில் இவைகளை குறைக்க முடியாது என்று
படித்தவர்களிருந்து பாமரர்கள் வரை கேட்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது தானே.
தேர்தல்கள் நான்கு, ஐந்தாறு வருடங்களுக்கு ஒரு
தடவை வருவதை காட்டிலும் அடிக்கொருத்தடவை தலையை காட்டினால் என்ன?
அப்போதுதான்விலைகள் சீரான விதத்தில்நின்றுகொண்டு இருக்கும். இல்லாவிட்டால்
ஒவ்வொருநாளும் நள்ளிரவு பன்னிரெண்டு மணி எனும் போது பூதம் கிளம்பிவிடும்.
பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கின்ற போது சம்பளங்களும், கூலிகளும் அவ்வாறு
அதிகரிப்பதில்லை.
வாழ்க்கை செலவு அதிகரித்து சம்பளங்களும்,
கூலிகளும் அதிகரிக்காத போது அங்கே மனக்கசப்பு உருவாகிறது ஆளும் அரசாங்கத்தின்
மீது. மனிதனானவன் உழைக்கும் சம்பாத்தியம் தனது தேவைக்கு செலவழித்த பின் மிகுதியை
சேமிக்க முயற்சிப்பான். ஆனால் உழைக்கும் சம்பாத்தியம் முழுதும் தேவைக்கு
செலவழித்து, சில போது கடன்வாங்கி செலவழிக்கும் நிலை என இருக்கின்ற போது அவனது
எண்ணம் வாழ்கையை வெறுக்கிறது. அதுவே ஆளும் அரசின் மீதான வெறுப்பாக மாறுகிறது.
இதுவே உழைக்கும் சம்பாத்தியத்தில் தனது தேவைக்கு
செலவழித்த பின் மிகுதியை சேமிப்பானாகஇருப்பின் அவனது வாழ்க்கை இனிக்கிறது.அது
ஆளும் அரசின் மீதான விருப்பாக மாறுகிறது.
அதேநேரம் இன்னொரு பக்கம் தனிமனித சேமிப்பு குறைய
குறைய, இல்லாமல்போக அங்கே முதலீடும் இல்லாமல் போகிறது. முதலீடு இல்லாமல் போக கடன்
அதிகரிக்கின்றது. ஒரு மனிதன் கடனாளியாக இருப்பதை பொதுவாக விரும்புவதில்லை. எனவே
அவன் ஆளும் அரசாங்கத்தை வெறுக்கிறான்.
இதுவே சேமிப்பு முதலீடாக மாறி இலாபம்
சம்பாதிக்கும் போது அவன் மகிழ்கிறான். அவன் அரசை விரும்புகிறான். ஆளும் அரசை ஆதரிப்பதற்குவாழ்க்கை
செலவு முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க இயலாது. வாழ்க்கை செலவு அதிகரிக்கும் போது I HATE GOVERNMENT என்றும், வாழ்க்கை செலவு குறையும் போது I LOVE GOVERNMENT என்றும் நீள்கிறது வாழ்க்கை வட்டம்.
அரசை தீர்மானிக்கின்ற முக்கிய வகிபாகமான விலைவாசி தேர்தல்கள் எனும் போதுலாவகமாக தலையை நீட்டி மண்டியிடுகிறது.
தேர்தல்கள் முடிந்த பின்னர் கம்பீரமாக தன்னை விட்டால் ஆளில்லை என தலைக்கனம் பிடித்து ஆடுகிறது.
இதுவே அடிக்கொருத்தடவை தேர்தல்கள் வரும் போது விலைவாசி அவர் தலை நிமிர முடியாது மண்டியிட்டுக் கொண்டே இருப்பார்.
மக்களும் மகிழ்வர். அம்மகிழ்ச்சியே அரசின் நிலையான இருப்பிற்கு அடித்தளமாக இருக்கும்.


0 Comments