ஜாதிக ஹெல உறுமயவுக்கும் தனக்குமிடையில் எந்தவித இரகசிய உடன்படிக்கைகளும் இல்லையென பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமயவின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தான் அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால், சகல பாதுகாப்புத் தரப்பினருடையவும் கௌரவத்தைப் பாதுகாப்பேன். அவர்களுக்குரிய இடத்தை வழங்குவேன். பாதுகாப்புப் படையினர் அணிந்துள்ள சீருடையின் கண்ணியத்தைப் பாதுகாப்பேன். சமையல் வேலை தொடக்கம் கடமைக்குப் புறம்பான பல்வேறு வேலைகளில் பாதுகாப்புப் பிரிவினர் உட்படுத்தப்படுகின்றனர். இதற்கு ஒரு போதும் தான் இடமளிக்கப் போவதில்லையெனவும் பொது வேட்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments