Subscribe Us

header ads

நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி


சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
எமது தேசிய முன்னணி என்ற கட்சியின் சார்பில் அவர் தேர்தல் செயலகத்தில் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.
அளுத்கம மோதல் சம்பவம், மாத்தளை மனித புதைக்குழி ஆகிய சம்பவங்கள் தொடர்பிலும் நாமல் ராஜபக்ஷ செயற்பாட்டு ரீதியான சட்டத்தரணியாக பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments