எம்-எச் முஹம்மத்,புத்தளம்
புத்தளம் முஸ்லிம்களின் பாரம்பரிய கலாசார விருந்தோம்பல் பண்பினை நினைவுப்படுத்தி, உள்ளுர் வரலாற்றினை அடுத்த சந்ததியினறுக்கு அடையாளப்படுத்திக்காட்டுவதற்கான சமூக ஒன்றுக்கூடல் நிகழ்வொன்று புத்தளம் நகரில் ஏற்பாடாகி வருகிறது.
விருந்துபசாரம், விருந்தோம்பல் செயல்பாடனாது உப்பைப்போன்று புத்தளத்தின் மற்றுமோறு அடையாளம் ஆகும். பாரம்பரிய புத்தள விருந்தோம்பல் பண்பினை நினைவுக்கூறும் முகமாக இன,மத,,கட்சிகள் மற்றும் இயக்க வேறுபாடுகள் யாவும் மறந்த சமூக ஒன்றுக்கூடலும் விருந்துபசார நிகழ்வும் எதிர்வரும் 6ம் திகதி சனிக்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு புத்தளம் மொளா மக்காம் பள்ளிக்கு அருகில்(பலநோக்கு கூட்டுறவு சங்க அலுவலகத்திக்கு முன்னால்) நடத்துவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் வாழ் சமூக நலன் விரும்பிகள் மற்றும் பலதரப்பட்ட இளைஞர் குழக்கள் என சமூக ஒற்றுமையை விரும்பும் குழுக்களாள் இந் நிகழ்வு ஏற்பாடாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மக்களின் பாரம்பரியத்தையும் கலாசார மரபுகளையம் அடையாளபடுத்தி சமூக ஒற்றுமையை வழியுத்துவதற்க்கான இவ் விருந்துபசார ஒன்றுக்கூடலுக்கு புத்தளம் நகர வாழ் அனைத்து தரப்பினரையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
ஒரு தளத்தில் ஒன்றினைவோம்…….!
புத்தளமாய் வந்தினைவோம்…


0 Comments