-அஷரப் ஏ சமத்-
நேற்று இரவு லண்டன் பீ.பீ.சி தமிழோசை செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் தொலைபேசி பேட்டியின்போது–
பி.பி.சி செய்திளார் -எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லீம் கட்சிகள் யாரை ஆதரிப்பது என்று முடிபு எடுத்துள்ளீர்களா ? அதில் உங்களது நிலைப்பாடு என்ன?
அமைச்சர் றிசாத் பதில் – இவ்வாறனதொரு ஜனாதிபதித் தேர்தல் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இன்னும் 2 வருடம் இருக்கத்தக்க அவர் தேர்தலில் குதித்துள்ளார்.
எமது கட்சி கடந்த சில தினங்களாக எமது கட்சி ஆதரவாளர்கள், புத்திஜீவிகள், உலமாக்களை கண்டு அவர்களுடன் கலந்தாலோசித்து வருகின்றோம். அதே போன்று புத்தளத்திற்கும் நாளை சென்று அங்குள்ள எமது கட்சி ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து எங்களது கட்சியின் முடிபை நாளை எடுக்க உள்ளோம்.
இந்த நாட்டில் 10 வீதமான முஸ்லீம்கள் வாழ்கின்றனர். கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் பல இண்னல்களை அனுபவித்து வந்தோம். சமாதனாம் ஏற்பட்ட பிறகு முஸ்லீம்களுக்கு பொதுபலசேனா. சிகல உருமைய பௌத்த இனவாத கட்சிகளினால் முஸ்லீம்களுக்கு பாரிய கஸ்டங்களையும் பிரச்சினைகளையும் உண்டுபண்னினார்கள். இவ்விடயத்தில் முஸ்லீம் கட்சித் தலைவர்கள்,
முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணர்கள் இனைந்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோம். சமுகம் என்ற ரீதியில் நாங்கள் ஒன்று கூடி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவந்துள்ளோம்.
இந்தத் தருணத்தில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் செயலாளர் ஒருவர் எதிர்கட்சி பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றார். ஜனர்திபதியை ஆதரிப்பதற்கு மலைய கட்சிகள், தேசிய காங்கிரஸ் முடிபை எடுத்துள்ளனர். எமது கட்சி நீண்டகாலமாக மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலேயே இருந்து வருகின்றோம்.
முஸ்லீம் காங்கிரஸ் தலைவரை ரவுப் ஹக்கீமையும் இன்று சந்தித்து உரையாடினேன். நாங்கள் சமுகத்தின் எதிர்காலத்தினை நன்மை கருதி முஸ்லீம் சமுகத்தின் பொருளாதாரம், இருப்பு ஆகியவற்றையே பேசினேன். மீண்டும் ஒரு இரு தினங்களில் ரவுப் ஹக்கீமை மீளசந்திக்க உள்ளேன்.என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரவித்தார்.

0 Comments