நேற்று முந்தினம் இரவு தெரன தொலைகாட்சியில் இடம்பெற்ற வாதபிட்டிய நிகழ்ச்சிக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பை தொடர்ந்து ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளிநடப்பு செய்திருந்தார்.இதனை தொடர்ந்து இது தொடர்பாக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் அரச தரப்பு அங்கத்தவர்கள் எதிர்வரும் காலங்களில் சிரச தொலைகாட்சியில் இடம்பெறும் சடன அரசியல் விவாத நிகழ்ச்சி தெரன தொலைகாட்சியில் இடம்பெறும் வாதபிடிய அரசியல் விவாத நிகழ்ச்சி டீ என் எல் தொலைகாட்சியில் இடம்பெறும் ஜனஹன்ட அரசியல் விவாத நிகழ்ச்சி ஆகிய அரசியல் நிகழ்ச்சிகளை அரச தரப்பு உறுப்பினர்கள் புறக்கணிக்க தீர்மாணித்துள்ளாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.
ஆளும் தரப்பு அங்கத்தவர்களை அசொளரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் மேற் குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்சுவர்ணவாஹினி ,ஹிரு ஆகிய தொலைகாட்சிகளில் இடம்பெறும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் அரசு தரப்பு கலந்துகொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

0 Comments